என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுரேஷ் ரெய்னா"
- கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடப்பெற்றது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பட போஸ்டரை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட், டோனிக்கு மிகவும் நெருக்கமானவர்.
- ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் ரூ.120 கோடி செலவிடலாம். இதற்கான ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ஜடேஜா ( 18 கோடி), பதிரனா ( 13 கோடி), ஷிவம் துபே (12 கோடி), டோனி (4 கோடி) ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. அந்த அணி ரூ.65 கோடி செலவழித்துள்ளது. கைவசம் ரூ.55 கோடி இருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சி.எஸ்,கே. முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
"அவர் கூறும்போது நான் டெல்லியில் டோனியை சந்தித்தேன். அங்கே ரிஷப் பண்டும் இருந்தார். ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் ஒருவர் மஞ்சள் ஆடையை அணியவுள்ளார் என்றார்.
விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட், டோனிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.எஸ்,கே.அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும், 17 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 128 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில், டெல்லி அணி 2021 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
கார் விபத்துக்கு பிறகு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய அவர் 13ஆட்டத்தில் 446 ரன்கள் எடுத்தார். 155 சராசரியாகும். 3 அரைசதம் அடங்கும்.
- அவர் இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார்.
- நல்ல தலைமைத்துவமும் கொண்டவர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவரை சிஎஸ்கே ரசிகர்கள் சின்ன தளபதி என்று அழைப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இதனையடுத்து லெஜண்ட்ஸ், சாம்பியன்ஸ் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு ரெய்னா சென்றுள்ளார்.
அப்போது கேரளா மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். மேலும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன். அவர் திறமையானவர். இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார். நல்ல தலைமைத்துவமும் கொண்டவர். சர்வதேச அரங்கில் அவர் ஜொலிப்பார் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு ரெய்னா கூறினார்.
- ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
- இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாம்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.
இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
- யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தினார்.
- விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.
புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
- நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.
வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.
இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.
- லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
- வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.
Winning celebrations from Yuvraj Singh, Harbhajan and Raina. ?? pic.twitter.com/mgrcnd8GpH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2024
இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.
- இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
- உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.
244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.
- நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
- இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.
இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
- வலையில் நான் பேட்டிங் செய்ததை பார்த்து ரெய்னா, பயிற்சியாளரிடம் இவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேட்டார்.
- அணியில் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் வலியுறுத்தினார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். இவர் விளையாடும் விதம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கிரிக்கெட்டிற்கான ஷாட்ஸ்களை மட்டுமே விளையாடுவார். கவர் திசையில் இவர் ஆடும் டிரைவ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
இவர் இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு அப்போதைய தேர்வாளரான இருந்த திலீப் வெங்சர்கார்தான் காரணம் என்பதை விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால் திலிப் வெங்சர்கார் பார்வையில் தென்படுவதற்கு சுரேஷ் ரெய்னாதான் முக்கிய காரணம். இவரால்தான் நான் தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாட காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜியோசினிமாவிற்கு விராட் கோலி அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:-
அந்த வருடம் 2008 என நினைக்கிறேன். இது இந்திய அணி போட்டி. ஆஸ்திரேலியாவில் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனென்றால், இதில் சிறப்பாக விளையாடினால் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க முடியும். இதனால் எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு அது முக்கியமான தொடராக அமைந்தது.
ஆகவே, ரெய்னா என்னைப் பற்றி கேள்வி பட்டிருக்கலாம் என்பது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
அவர் தொடரின் பாதியில்தான் அணிக்கு வந்தார். முதலில் பத்ரிநாத் கேப்டனாக இருந்தார். ரெய்னா வந்ததும் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பிரவீன் ஆம்ரே பயிற்சியாளராக இருந்தார். அவர் என்னை ஆடும் லெவனில் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தார்.
வலைப்பயிற்சியில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த ரெய்னா ஆம்ரேவிடம், என்னை ஏன் விளையாட வைக்கவில்லை என்று கேட்டார். ரகானே தொடக்க வீரராக விளையாடுகிறார். நான் மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டேன்.
அணியில் என்னை இறக்குவற்கான இடம் இல்லை என்றார்.
அப்போது ரெய்னா நான் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆகவே, பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து, தொடக்க வீரராக களம் இறங்க சம்மதமா? எனக் கேட்டார்.
விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், எந்த வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வேன் என நான் கூறினேன். ஆகவே, நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டேன். திலீப் வெங்சர்கார் அந்த நேரம் தேர்வாளராக இருந்தார். நான் நியூசிலாந்துக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன். எனக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருக்கலாம்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.
அதே ஆண்டில் விராட் கோலி இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.
- நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
- சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
- வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் கமென்ட்ரி மற்றும் அது சார்ந்த பணிகளில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சாலையோர கடை ஒன்றில் நவாப்பழம் (நவால் பழம்) வாங்கிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவின் படி சுரேஷ் ரெய்னா மும்பையில் உள்ள சாலையோர கடை ஒன்றில் நவாப்பழம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்